Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

[111208340906.jpg]

உன் வீட்டின் எதிரே உள்ள
காரவீட்டு மொட்டை மாடியில்
அதிகாலை முதலே
காத்திருந்தேன்
எழுந்தவுடன் வாசற்கதவை
திறந்தாய்....
அன்றுதான் தெரிந்துகொண்டேன்
தினமும்
நீ குளிப்பதாக நினைத்து
உன் அழகை நீயே
அழித்துக்கொண்டு இருக்கிறாய்..!
                                                                       rasiganbalu@gmail.com


கவிதைகளும் எழுதுகிறேன்

பரிட்சைகளில் காப்பி அடிச்சு
பாஸ் பெண்ணினேன்
இல்லை என்று சொல்லவில்லை...
ஆனால்...........

இப்பொழுதெல்லாம்
உன்னை காப்பி அடிச்சே..
கவிதைகளும் எழுதுகிறேன்..,
                                                                  rasiganbalu@gmail.com


 சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள 
சிலுசிலுன்னு தென்றல் வீசிய 
அந்த சில நாட்களை
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

புதுசு புதுசாக நெனப்புகள் 
பூத்து குலுங்கிய அந்த 
பொன்னான நாட்களை 
வாழ்நாளில் 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சின்னாவால வீடு கட்டி நானும் நீயும் 
குடித்தனமும் நடத்திபாதோம்....
அந்த மலையடிவாரத்தில் 
வாழுரப்போ
மீன்கொழம்பு வச்சு, ஊட்டிவிட்டதை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

வாழ்க்கை பயணத்தில் இந்த பயணம் 
தந்த இன்பம் துன்பம் 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் 
சிரிப்பு கும்மாளம் 
பப்லூ , இன்னோவா...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

காட்டுப்பகுதி கோயிலுக்குள்ள 
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 
துண்ணூறு குங்குமம் வச்சது 
பாதி கல்யாணம் ஆனமாதிரி இருந்தது...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சில்லென்ற குளிர் காற்றுடன் 
காதலின் சந்கீதங்களுடன் 
வாழ்ந்து பார்த்த 
அந்த சிலநாட்களை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது.,...

----------------------ரசிகன்பாலு. சிங்கபூர் 
rasiganbalu@gmail.com 

நினைவிருக்கிறதா? பெண்ணே ,
உனக்கு
நினைவிருக்கிறதா?

நீ உன் காதலை
என்னிடம் சொல்ல
வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு
அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?


நான் வீட்டில் இருக்கிறேனா
என்று
பார்த்து வரச்சொல்லி
உன் தோழியை
அனுப்பி வைப்பாயே
நினைவிருக்கிறதா ?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா ?


ஒரு திருமண மண்டபத்தில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?



என் காதல் கடிதங்கள்
உன் தோழியின் பெயரில்
வருமே அந்த
கவிதைகள்
நினைவிருக்கிறதா ?



தொலைபேசியில்
நான் உன்னுடன் பேசிக்கொண்டு
இருக்கும்போது
"வேற ஒன்னும் இல்லையா "
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா ?



துணி உலர்த்த மாடிக்குப்போகும்
போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா ?

நாம் முதல் முறையாக
அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டு இருந்த
அந்த பெரிய கரவீடு
நினைவிருக்கிறதா ?



நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
ராசி பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?



தனிமையில் படிக்கிறேன்
என்று சொல்லி
உன் பார்வைக்காக
மொட்டைமாடிக்கு
வருவேனே
நினைவுக்கிறதா ?

அடுத்து இவளுக்குத்தான்
கல்யாணம்
என்று சொன்னதும்
ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா ?


rasiganbalu@gmail.com
அனுபவம்


Share/Bookmark




உன்னை முதல் முறை பார்த்ததும் பிடித்ததே அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் கண்கள் சந்தித்ததும் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நாம் கைகோர்த்து நடக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் மெளனங்கள் பேசியதை கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !! இருவரும் மற்றவர் தவறுகளை மறக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை கடிந்து பேசியபின் நான் அழுகையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


புன்னகையில் என் சோகங்களை மறக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


என் சுமைகளை நீ சுமப்பதை கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !! என் கண்ணீருக்கு தோள் கொடுக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நிமிடமும் உன் நினைவுகள் என்னை ஆட்கொள்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை பிறிந்த போதும் நீ என்னுள் இருக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


இன்று உன் மடியில் குழந்தையென மாறியதும் உணர்ந்தேன் இது தான் காதல் என்று !!


rasiganbalu@gmail.com

Share/Bookmark

valaipookkal.com Tamil Blogs