சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள 
சிலுசிலுன்னு தென்றல் வீசிய 
அந்த சில நாட்களை
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

புதுசு புதுசாக நெனப்புகள் 
பூத்து குலுங்கிய அந்த 
பொன்னான நாட்களை 
வாழ்நாளில் 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சின்னாவால வீடு கட்டி நானும் நீயும் 
குடித்தனமும் நடத்திபாதோம்....
அந்த மலையடிவாரத்தில் 
வாழுரப்போ
மீன்கொழம்பு வச்சு, ஊட்டிவிட்டதை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

வாழ்க்கை பயணத்தில் இந்த பயணம் 
தந்த இன்பம் துன்பம் 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் 
சிரிப்பு கும்மாளம் 
பப்லூ , இன்னோவா...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

காட்டுப்பகுதி கோயிலுக்குள்ள 
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 
துண்ணூறு குங்குமம் வச்சது 
பாதி கல்யாணம் ஆனமாதிரி இருந்தது...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சில்லென்ற குளிர் காற்றுடன் 
காதலின் சந்கீதங்களுடன் 
வாழ்ந்து பார்த்த 
அந்த சிலநாட்களை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது.,...

----------------------ரசிகன்பாலு. சிங்கபூர் 
rasiganbalu@gmail.com