காதல‌ர்க‌ள் ‌‌சி‌ற்‌சில தவறுகளை செ‌ய்து‌வி‌ட்டு பெ‌ரிதாக ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள். அதனை‌த் த‌வி‌ர்‌க்க உ‌ங்களு‌க்கு ‌சில யோசனைகளை‌த் தரு‌கிறோ‌ம்.

காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.

உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் சொ‌ல்‌லி ‌விடு‌ங்க‌ள் உ‌ங்க‌ள் காதலை.

காத‌லி‌ப்பவ‌ரி‌ன் ‌பிற‌ந்த நா‌ளை ம‌ட்டு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் மற‌ந்து ‌விடா‌தீ‌ர்க‌ள். அ‌ன்றைய நாளை மு‌ன்னரே ‌நினைவு கூ‌ர்‌ந்து அவருட‌ன் ‌சிற‌ப்பாக க‌ழி‌க்க ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

‌ஒ‌ன்று... ‌உன‌க்கு வரு‌ம் ‌பிற‌ந்தநாளை எ‌ப்படி‌க் கொ‌ண்டாடலா‌ம் எ‌ன்று அவருட‌ன் கல‌ந்து பே‌சி ‌தி‌ட்ட‌மி‌ட்டு அதனை செய‌ல்படு‌த்தலா‌ம்.



அ‌ல்லது... ‌பிற‌ந்த நா‌ள் ‌நினை‌வி‌ல் இ‌ல்லாததுபோ‌ல் இரு‌ந்து‌வி‌ட்டு, அ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ப‌‌ரிசுக‌ள் கொடு‌த்து கொ‌ண்டாடி அச‌த்தலா‌ம். ஆனா‌ல் சொத‌ப்‌பி ‌விட‌க் கூடாது. ‌

காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.

காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று ந‌ினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.

‌காதல‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் ரக‌சிய‌ங்க‌ள் அவ‌ர்களு‌க்கு ம‌ட்டு‌ம் தெ‌ரி‌ந்தவையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.
NET ல் சுட்டது