காதலில்.....
மரித்துப் போக ஆசை....!!!
என்னை மறந்து போக ஆசை...!!!!
காதலில்....
எரிந்து போக ஆசை....!!!
கூடவே உனது எண்ணத்தையும்
எடுத்துப் போக ஆசை...!!!
காதலில்....
உருகிப் போக ஆசை....!!!
உனக்காகவும் உயிரை
உருக்கிப் போக ஆசை....!!!
காதலில்.....
கருகிப் போக ஆசை....!!!
உன் கண்ணுக்குள் ......
கரைந்து போக ஆசை....!!!
காதலில்....
உயிர் கொடுக்க ஆசை...!!!
உனதாய்...உன்னுள்ளே...
உறைந்து போகவும் ஆசை....!!!
காதலில் .....
எண்ணங்களில் எத்தனை ஆசை...!!!
இனிமையென்னும் வண்ணம்....
சேர்த்திடவும் ஆசை.....!!!
காதலில்.....
நீரின்றி வாழா பயிர் போலே...
நீயின்றி போகாதிருக்க ஆசை....!!!
காதலில்....
மயிர் நீங்கின் உயிர் ....
வாழா கவரிமான் போலே...!!!
உயிர் மீளா உறக்கத்திலும்....
உன்னுடனே இறக்க ஆசை....!!!
இப்படிக்கு ..
உன் காதலி...!!!
-----------------------------------சுகி ஈஸ்வர்