தனிமையில்
நான் மட்டும் ..

ஒரு
சிறிய கோயில்
எதிரே ஒரு
பெரிய தெப்பக்குளம்
அருகே
ஒரு கல்லின்மேல்
அமர்ந்து
திருவிழாவில் காணமல்போன
குழந்தைபோல
தனிமையில்
நான் மட்டும் ..

எப்போது எனக்குள்
மீண்டும் கொலமிடுவாயென
எதிர்நோக்கி,
வீதியின் விளிம்புவரை
பார்வையை செலுத்தியபடி
காத்திருக்கிறேன்
நான் மட்டும் ...

காதல் சந்தோசம்
மனசுக்குள் கலவரம்
தவிப்போடு தனிமையில்
நான் மட்டும் ...

Share/Bookmark


rasiganbalu@gmail.com