முதல் நிலை

அறிமுக நாட்களிலும், அடுத்த
சில நாட்களிலும் - நீ வீசிச்சென்ற
புன்னகைதான்,
என் சித்தம் கலைத்தது,
மனதிலோர் யுத்தம் முளைத்தது.
அகத்தில் ரசித்தாலும் - அதை
புறத்தில் முறைத்தேன் நான்..

இரண்டாம் நிலை

மீண்டும் தொடர்ந்த சில நாட்களில்- என் மனம்
என்னைக் கேட்காமல் - தினம்
உன்னை எதிர்ப்பார்க்கும்
நீ வந்தால் சிறகடிக்கும்
இல்லையேல் நகம் கடிக்கும்

உன் வருகைக்கு கோஷமிடும்
வந்ததும் பார்க்காததாய் வேஷமிடும்

மூன்றாம் நிலை

நீ நட்புடன் பழக வந்தாய் - ஆனால்
நான் வெறுப்பதாய் விலகிச்சென்றேன்,
என் கற்புடன் விளையாட வந்த
கள்வனோ என பயந்தேன்
பின் நாளில், கற்பிற்கு மட்டுமல்ல
காலத்திற்கும் உடனிருக்கும் கணவன் - நீ
என அறிந்தேன்.

அன்று முதல்..

கற்பிற்குள் ஒளித்து வைத்து
உனக்கான காதலையும் நான் சுமந்தேன்..

நான்காம் நிலை

இரவில், போர்வைக்குள் விழித்திருந்தேன்
சிலகாலம்..
காதலின் கனவுகள் போர்த்தி தூங்கினேன்
சிலகாலம்..
வெளியில் மௌனம் சாதித்தேன்,
உள்ளத்தில் வார்த்தைகள் சேமித்தேன்,
காதல் சொல்ல ஒரு தருணமும் யூகித்தேன்.
ஆனால்,
உன் பார்வை சந்தித்த போது
சிதறிப்போயின சேமித்த வார்த்தைகள்.
எனினும்,
கஜினியாய் படையெடுத்தேன் - உன்னிடம்
காதலைச் சொல்ல,
ஆனால் இன்றுவரை இயலவில்லை - என்பதை
வேறு எப்படிச் சொல்ல?

ஐந்தாம் நிலை

காதல் தெரிவிப்பதென்பது
ஆண்களின் வேலை,
ஏற்பதும், தவிர்ப்பதும்
பெண்களின் லீலை.
எனவே காதலா, எப்போது சொல்வாய்?
என்னுடைய காதலை
உன்னுடைய வார்த்தைகளாய்.
அப்போது தருவேன் நான்
முத்தமாய் அன்பையும்
மொத்தமாய் என்னையும்.


எழுதியவர் : சக்தி குமார்-கோவை
கவிதைகள்


 சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள 
சிலுசிலுன்னு தென்றல் வீசிய 
அந்த சில நாட்களை
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

புதுசு புதுசாக நெனப்புகள் 
பூத்து குலுங்கிய அந்த 
பொன்னான நாட்களை 
வாழ்நாளில் 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சின்னாவால வீடு கட்டி நானும் நீயும் 
குடித்தனமும் நடத்திபாதோம்....
அந்த மலையடிவாரத்தில் 
வாழுரப்போ
மீன்கொழம்பு வச்சு, ஊட்டிவிட்டதை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

வாழ்க்கை பயணத்தில் இந்த பயணம் 
தந்த இன்பம் துன்பம் 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் 
சிரிப்பு கும்மாளம் 
பப்லூ , இன்னோவா...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

காட்டுப்பகுதி கோயிலுக்குள்ள 
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 
துண்ணூறு குங்குமம் வச்சது 
பாதி கல்யாணம் ஆனமாதிரி இருந்தது...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சில்லென்ற குளிர் காற்றுடன் 
காதலின் சந்கீதங்களுடன் 
வாழ்ந்து பார்த்த 
அந்த சிலநாட்களை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது.,...

----------------------ரசிகன்பாலு. சிங்கபூர் 
rasiganbalu@gmail.com 

வாய்க்கால் மேட்டில் நின்றிருந்த உனக்குத் தெரியாமல், பின்னால் வந்து சட்டென்று உன் கையைப் பிடித்தேன். பதறித் திரும்பிய நீ என்னைப் பார்த்ததும், ??அய்யோ… கையை விடுங்க. வெக்கமா இருக்கு? என்று நெளிந்தாய்.
வலிக்குதுனு சொல்லு! அதிலே நியாயம் இருக்கு… வெக்கமாத்தானே இருக்கு. அதுக்கு ஏன் கையை விடணும்? ஆமா, வெட்கப்படறது உனக்குப் பிடிக்காதா? என்றேன்.
ம்ம்ம்… வெக்கப்பட எந்தப் பொண்ணுக்காவது புடிக்காம இருக்குமா? என்றாய் வெட்கம் பொங்க.
பிடிச்சிருக்குன்னா, ஏன் விடச் சொல்லணும்? அய்யோ… வெக்கமா இருக்கு. அப்படியே கையைப் பிடிச்சிட்டே இருங்கனுதானே சொல்லணும் நீ!? என்றேன்.
சிரித்து விலகிய நீ, அதெல்லாம் லூசுப் பொண்ணுதான் சொல்வா!? என்றாய்.
அப்போ நீ லூசு இல்லையா?? என்றேன்.
உங்கள… என்று என்னை அடிக்க ஓடி வந்த உன் கையை மறுபடியும் பிடித்தேன். சிணுங்கிச் சிரித்துச் சிணுங்கி, வெட்க கீதம் பாட ஆரம்பித்தாய்.
சொல்லு! ?அய்யோ வெக்கமா இருக்கு.. அப்படியே பிடிச்சுக்கோங்க!னு சொல்லு!? என்றேன், உன் காதோரமாக. அய்யோ… காலங்காத்தால இந்த ராட்சசன்கிட்ட மாட்டிக் கிட்டேனே… யாராவது வந்து என்னைக் காப்பாத்துங்களேன்!? என்று கத்தினாய்… என்னைத் தவிர வேறு யாருக்கும் கேட்காத குரலில்!
அய்யோ இந்தப் பொண்ணு என் கையைப் பிடிச்சு வம்பு பண்றாளே!? திடீரென உலகத்துக்கே கேட்கும்படியாக நான் கத்தினேன். பயந்து விலகிய நீ, ?ச்சீ… பொறுக்கிடா நீ!? என்றாய் குறும்பான எரிச்சல் குரலில்.
ஆமாம்! பொறுக்கியிலும் பொறுக்கி… ஒண்ணாம் நம்பர் பொறுக்கி! அதனால்தான் இந்த உலகத்தையே கலவரப்படுத்திய படித் திரிகிற ஆயிரக்கணக்கான தேவதைகளில் இருந்து, ஒண்ணாம் நம்பர் தேவதையான உன்னைப் பொறுக்கி எடுக்க முடிந்தது என்னால்!? என்றேன்.
இப்போது நீ சொன்னாய். ?டேய், லூசாடா நீ??
வெட்கவியல்!
எப்போதாவது உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,
பெற வேண்டும்
என்றல்ல
ம்ஹம் என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல் கவிதை
சிந்துவாயே…
ஆசை ஆசையாய்
அதை
வாசிக்கத்தான்!
ஊர்வலம் போக
அம்மன் தேர் ஏறியது
பரவசமாயினர் பக்தர்கள்
ஊருக்குப் போக
நீ கார் ஏறினாய்
பாவமானேன் நான்.
சாலையில் எப்போதும்
வலப் புறமாகச் செல்லும்
வாகனங்களைப் போல
நான் எப்போதும்
உன் நிழல் புறமாகவே நடக்கிறேன்…
எப்போதும் உன் நிழல்
என் மீது விழவேண்டும் என்பதற்காக.
இரு விழிகளில்
ஒரு பார்வையைப் போல
நம் இரு இதயத்திற்கும்
ஒரே காதல்தான்.
தபூ சங்கர்-

rasiganbalu@gmail.com

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!
 
1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!
2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!
3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.
4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.
5. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.
6. அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!
7. தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.
8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.
9. கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள்  காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.
10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!
11. அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!
12. அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!
13. அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..
15. அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.
16. இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!

நன்றி: தமிழ்த்துளி - தேவா.

rasiganbalu@gmail.com

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..


நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...

குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
குழம்புதய்யா என் மனசு..

சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..

வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...

வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?

வெளி வேலை., வங்கி வேலை .,
பள்ளிவேலை., பாட வேலை
எந்த வேலை செய்தாலும்
எந்துணையே நீ இல்லை........

கை கொடுத்த தெய்வமே...
என்னை கையோட அழைச்சுப்போ...

கஷ்டப்பட்டு நீ உழைக்க
உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...

சொந்த வீடு., காரினிலே
என்னை சுகமாக இருக்க வச்சே..

உலகத்து வசதியெல்லாம்
பிள்ளைகளுக்கு செஞ்சு வச்சே...
அம்மா., அப்பா .,அண்ணன் .,தம்பி .,
மாமா., மாமி எல்லோரும் என்னோட...

என்னைக் கைப்பிடித்த கருணையே
எப்ப வருவ.....   எப்ப வருவ...
என் கைபிடிக்குள் எப்ப வருவ........???குறிப்பு : NET ல் சுட்டது 

Share/Bookmark

தனிமையில்
நான் மட்டும் ..

ஒரு
சிறிய கோயில்
எதிரே ஒரு
பெரிய தெப்பக்குளம்
அருகே
ஒரு கல்லின்மேல்
அமர்ந்து
திருவிழாவில் காணமல்போன
குழந்தைபோல
தனிமையில்
நான் மட்டும் ..

எப்போது எனக்குள்
மீண்டும் கொலமிடுவாயென
எதிர்நோக்கி,
வீதியின் விளிம்புவரை
பார்வையை செலுத்தியபடி
காத்திருக்கிறேன்
நான் மட்டும் ...

காதல் சந்தோசம்
மனசுக்குள் கலவரம்
தவிப்போடு தனிமையில்
நான் மட்டும் ...

Share/Bookmark


rasiganbalu@gmail.com


காதல்


இன்பம் துன்பம்
விருப்பு வெறுப்பு
சண்டை சச்சரவு
அன்பு அரவணைப்பு
ஆக்கம் ஊக்கம்
ஏக்கம் ஏமாற்றம்
கெஞ்சுதல் கொஞ்சுதல் மிஞ்சுதல்
கஷ்டம் நஷ்டம்
புகழ்ச்சி இகழ்ச்சி
பதவி உதவி
தாக்கம் தவிப்பு
எதிர்பார்ப்பு ஏமாற்றம்

எல்லாம் கலந்த ஒரே கலவை தாங்க காதல் ....
Share/Bookmark

rasiganbalu@gmail.com


காதலிப்பது எப்படி :1) முதலில்
உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.


9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)
12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

NET ல் சுட்டது .,
நன்றி : கவிதை காதலன்

Share/Bookmark

நீ
அன்பாய் பேசுவதை விட
சண்டையிடுவதே
எனக்கு பிடிதிருக்கிறது ,

இதுவரை
ஆயிரம் சண்டைகள்
போட்டுஇருப்போம் ,
ஏன் லட்சம் சண்டைகள்
போட்டுஇருப்போம் ,

ஆனாலும் துளிகூட
குறையவில்லை என் காதல் ...

சண்டையிட்டபின்
சமாதனபடுத்தும்
அழகே
தனி அழகுதான்...Share/Bookmark

rasiganbalu@gmail.com