உன் அன்பு

என் வெளிச்சம்


உன் காதல்

என் காவல்


உன் பேச்சு

என் இன்பம்


உன் குரல்

என் தேடல்


உன் சிரிப்பு

என் செல்வாக்கு


உன் நலம்

என் நிம்மதி


உன் நிம்மதி

என் சந்தோஷம்

உன் உயிர்

அது என் உயிர் .!


INDHA KAVITHAI ENATHU VALAI NANBARIN PADAIPPU

sthenral@googlemail.com


இப்பொழுதே

என்னை காதலித்துவிடு ....

இல்லையென்றால்

அடுத்த ஜென்மத்தில்

இதற்கும் சேர்த்து

நிறைய காதலிக்க

வேண்டிஇருக்கும் !...

நினைவிருக்கிறதா? பெண்ணே ,
உனக்கு
நினைவிருக்கிறதா?

நீ உன் காதலை
என்னிடம் சொல்ல
வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு
அசட்டு சிரிப்புடன் சென்றது

நினைவிருக்கிறதா ?


நான் வீட்டில் இருக்கிறேனா
என்று
பார்த்து வரச்சொல்லி
உன் தோழியை
அனுப்பி வைப்பாயே
நினைவிருக்கிறதா ?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா ?


ஒரு திருமண மண்டபத்தில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?என் காதல் கடிதங்கள்
உன் தோழியின் பெயரில்
வருமே அந்த
கவிதைகள்
நினைவிருக்கிறதா ?தொலைபேசியில்
நான் உன்னுடன் பேசிக்கொண்டு
இருக்கும்போது
"வேற ஒன்னும் இல்லையா "
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா ?துணி உலர்த்த மாடிக்குப்போகும்
போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா ?

நாம் முதல் முறையாக
அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டு இருந்த
அந்த பெரிய கரவீடு
நினைவிருக்கிறதா ?நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
ராசி பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?தனிமையில் படிக்கிறேன்
என்று சொல்லி
உன் பார்வைக்காக
மொட்டைமாடிக்கு
வருவேனே
நினைவுக்கிறதா ?

அடுத்து இவளுக்குத்தான்
கல்யாணம்
என்று சொன்னதும்
ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா ?


rasiganbalu@gmail.com
அனுபவம்


Share/Bookmark


கண்கள் பேசவேண்டுமாம்

இரண்டு நிமிடங்கள்
என்னை பார்,
என் கண்கள் உன்னிடம்
பேச வேண்டுமாம்
இரண்டு வருடங்கள்
பேச
நினைத்ததை...

rasiganbalu@gmail.com
Share/Bookmark